/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த கட்டுப்பாடு
/
சேலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த கட்டுப்பாடு
சேலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த கட்டுப்பாடு
சேலத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த கட்டுப்பாடு
ADDED : ஜூலை 18, 2025 01:19 AM
சேலம், சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரத போராட்டம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு, தமிழ்நாடு மாநகர சட்டத்தின்படி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.
இது போன்ற நிகழ்வுகளுக்கு குறைந்தபட்சம், ஐந்து நாட்களுக்குள் முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின், பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க படமாட்டாது.
விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு இவை பொருந்தாது என, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.