/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
வருவாய் கிராம ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 04:01 AM
ஓமலுார்: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி முதல் கட்டமாக, நேற்று, ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில், மீண்டும் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குதல்; முறையான சி.பி.எஸ்., எண் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். செயலர் முத்துக்குமரன், பொருளாளர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். அதில் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, கிராம உதவியாளர்களுக்கு வழங்குதல்; கிராம உதவியாளர்களுக்கு மாற்று பணி வழங்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில சங்க தணிக்கையாளர் முருகேசன், மாவட்ட துணை செயலர் பிரபு, தாலுகா தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

