ADDED : ஏப் 20, 2025 01:58 AM
பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, ஆலமரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து சந்தியூர் வழியே பாரப்பட்டிக்கு தார்ச்சாலை செல்கிறது. அச்சாலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் கிடங்கு, வேளாண் அறிவியல் நிலையம், அரசு நடுநிலைப்பள்ளி, ரேஷன் கடை உள்ளன. அதன் வழியே அதிக பாரம் ஏற்றிய கல் குவாரியின் கனரக வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்வதால் தார்ச்சாலை சேதமடைந்துள்ளது. அகலம் குறைவான சாலையில், கனரக டிப்பர் லாரிகள் செல்லும்போது, மற்ற பள்ளி, கல்லுாரி வாகனங்கள், ஆட்டோ, கார், பைக் உள்ளிட்டவை செல்ல இடமில்லை.
இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. அதனால் சந்தியூர் சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் செல்வதால், தரமான, உறுதியான வகையில் சாலையை அமைக்க, மக்கள் வலியுறுத்தினர்.சர்வீஸ் சாலைஅதேபோல் ஓமலுார் அருகே சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி, இரு ஆண்டாக நடக்கிறது. சில நாட்களாக, அந்த மேம்பாலத்தில் தற்காலிகமாக, வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் சர்வீஸ் சாலைகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது. ஆனால் அந்த சாலை முழுதும் சேதமாகி ஆங்காங்கே பள்ளங்களாக மாறியுள்ளன. வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும்.

