ADDED : ஆக 08, 2025 01:47 AM
சேலம், நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்(சாலை ஆய்வாளர்) சங்கம் சார்பில், சேலம், குரங்குச்சாவடியில் உள்ள தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் வில்லியம் அந்தோணி தலைமை வகித்தார்.
பொதுச்செயலர் குருசாமி பேசுகையில், ''சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் திறன்மிகு உதவியாளர் நிலை - 1 பணியிடம் ஓராண்டுக்கு மேல் காலியாக உள்ள நிலையில், நிலை - 2ல் பணியாற்றும் முதுநிலை மற்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு கொடுத்து நிரப்பாமல், அரசாணை, விதிகளை மீறி வேறு கோட்டத்தில் பணியாற்றி வந்தவருக்கு இடமாறுதல் அடிப்படையில் நிலை - 1 பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது,'' என்றார். மண்டல செயலர் கார்த்தி, மாநில பொருளாளர் சாலமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.