/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
ADDED : பிப் 19, 2025 07:05 AM
சேலம்: சேலம், சூரமங்கலம், பெரியார் நகரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில், 6 மாதங்களாகவே முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை.
இந்நிலையில், 15 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பெண்கள், திருநங்கையர், காலிக்குடங்களுடன், புது ரோடு அருகே, நேற்று காலை, இரும்பாலை பிரதான சாலையில், மறியலில் ஈடுபட்டனர். சூரமங்கலம் போலீசார் பேச்சு நடத்தினர். அப்போது, பெண்கள் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், 'அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் உறுதி அளித்தனர். இதனால் பெண்கள், மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

