/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ADDED : ஜன 31, 2025 02:49 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமென்ட் தொழிற்-சாலை, வாழப்பாடி உட்கோட்ட போலீஸ் துறை, வட்டார போக்-குவரத்துத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவை-யொட்டி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரசார பேரணி நேற்று முன்தினம் நடந்தது.
தொழிற்சாலை துணைத்தலைவர் துரை சிங்-கராஜா தலைமை வகித்தார். பணியாளர் துறை அலுவலர் மணிவேல் வரவேற்றார். துணை பொது மேலாளர் சதீஷ்குமார், கணக்கு துறை அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.வாழப்பாடி டி.எஸ்.பி., ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர்
முத்துக்குமார், பேரணியை தொடங்கி வைத்தார். சிங்கிபுரத்தில் இருந்து வாழப்பாடி வரை, முக்கிய வீதிகளில் பேரணி சென்றது.
முன்னதாக அனைவரும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி-மொழி ஏற்றனர். தொடர்ந்து வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகு-தியில், வாகன ஓட்டிகள், பயணியருக்கு, சாலை பாதுகாப்பு, விதிகள் குறித்த கையேடுகள், ஹெல்மெட் அணிந்து சென்றவர்க-ளுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. இதில் தொழிற்சாலை அலுவ-லர்கள் முனியசாமி, மயில்சாமி, சுபாஷ் உள்ளிட்ட பணியா-ளர்கள், எஸ்.ஐ.,க்கள் வெங்கடாஜலம், தாமரைச்செல்வன், மயில்-சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.