/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் ஓய்வு சாலை பணியாளர் பலி குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
/
விபத்தில் ஓய்வு சாலை பணியாளர் பலி குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
விபத்தில் ஓய்வு சாலை பணியாளர் பலி குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
விபத்தில் ஓய்வு சாலை பணியாளர் பலி குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம்
ADDED : ஆக 17, 2025 02:13 AM
வாழப்பாடி வாழப்பாடி, அக்ரஹார நாட்டாமங்கலம் மாதா கோவில் பகுதியை சேர்ந்த, ஓய்வு பெற்ற சாலை பணியாளர் செல்வராஜ், 65. இவரது மருமகள் கெலன்பிரியா, 29. பேரன்கள் டெல்வின், 5, ஜோவின், 1. இவர்கள் நேற்று மதியம், 12:30 மணிக்கு, சேசன்சாவடி மைக்ரோ பஸ் ஸ்டாப் அருகே, 'டியோ' மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் செல்வராஜ் ஓட்டினார். அங்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, 'ஆர் 15' பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மொபட்டில் வந்த, 4 பேர், பைக்கில் வந்த ஒருவர் என, 5 பேரும் படுகாயம் அடைந்தனர். மக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆனால் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார். கெலன்பிரியா, அவரது மகன்கள் டெல்வின், ஜோவின், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பைக்கில் வந்தவர், சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.