தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/'ரோலர் ஸ்கேட்டிங்' 200 பேர் பங்கேற்பு

'ரோலர் ஸ்கேட்டிங்' 200 பேர் பங்கேற்பு

'ரோலர் ஸ்கேட்டிங்' 200 பேர் பங்கேற்பு


ADDED : செப் 28, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அண்டு கேம்ஸ் சங்கம் சார்பில், 23வது மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, பள்ளப்பட்டி ஏரி பின்புறம் உள்ள, ஜி.எஸ்.டி., சிந்தடிக் இன்டர்-நேஷனல் ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று நடந்தது. தலைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

அதில், 6 - 8 வயது, 8 - 10; 10 - 12; 12 - 15; 15 - 18; 18 வயதுக்கு மேற்பட்டோர் என, 6 பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியே, 'ரோடு' மற்றும் 'ரிங்' போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுதும், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்-டன.ஏற்பாடுகளை செயலர் தினேஷ், உப தலைவர்கள் சக்திவேல், திருநாவுக்கரசு, பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வா-கிகள் செய்திருந்தனர். 6 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர், நவம்பரில் பொள்ளாச்சியில் நடக்க உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us