ADDED : நவ 16, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே அணைமேடு பள்ளிகொண்டான்பாறையை சேர்ந்த, கட்டட தொழிலாளி மணிகண்டன், 28. புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதியில் கட்டட வேலைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகஜோதிஸ்ரீ, 24, என்பவருக்கும் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.
தொடர்ந்து கடந்த, 13ல் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும், பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரை அழைத்து பேசினர். நாகஜோதிஸ்ரீ பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் மணிகண்டனுடன், நாகஜோதிஸ்ரீயை அனுப்பினர்.

