sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு

/

வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு

வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு

வரும் 19, 20ல் பேச்சுப்போட்டி:மாணவ, மாணவியருக்கு அழைப்பு


ADDED : நவ 16, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்;அண்ணாதுரை, ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு

பேச்சுப்போட்டி, வரும், 19, 20ல், சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. 6 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு, காலை, 9:30 முதல், மதியம், 1:00 மணி வரை, போட்டி தனித்தனியே நடக்கும். 19ல், 'தமிழ்மொழி வளர்ச்சிக்கான அண்ணாதுரையின் அரும்பணி; பெண்ணுரிமைக்கு அண்ணாதுரை அளித்த முக்கியத்துவம்; சமூக நீதிக்கான அண்ணாதுரையின் கொள்கைகள்' தலைப்புகளில் பள்ளி மாணவர்களும், 'அண்ணாதுரையின் கூட்டாட்சி கொள்கை; அண்ணா

துரை சிறந்த எழுத்தாளர்; சட்டசபையில் அண்ணாதுரை' தலைப்புகளில் கல்லுாரி மாணவர்களும் பேசலாம்.

மறுநாள் நடக்கும் போட்டியில் பள்ளி மாணவர்கள், 'ஈ.வெ.ரா.,வின் பெண்ணியம்; ஈ.வெ.ரா.,வின் சமூக சீர்த்திருத்தங்கள்; சுயமரியாதை இயக்கம்' தலைப்புகளிலும், கல்லுாரி மாணவர்கள், 'ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு போராட்டம்; ஈ.வெ.ரா.,வின் எழுத்து பணி;

ஈ.வெ.ரா.,வும் மூட நம்பிக்கை ஒழிப்பும்' தலைப்புகளில் பேசலாம். தகவலுக்கு, மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனரை, 0427 - 2417741 என்ற எண்ணில் அழைக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us