/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேற்கூரை விழுந்து தையல் கடையில் பொருட்சேதம்
/
மேற்கூரை விழுந்து தையல் கடையில் பொருட்சேதம்
ADDED : மே 23, 2025 01:28 AM
மேட்டூர்,
மேச்சேரி டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமாக தெப்பக்குளம் செல்லும் சாலையோரம், 9 கடைகள் உள்ளன. அந்த கடைகள் கட்டி, 50 ஆண்டான நிலையில் பலவீனமாக உள்ளது. சில நாட்களாக மேச்சேரி சுற்றுப்பகுதியில் மழை பெய்தது. இதனால் பழைய கட்டட மேற்கூரையில் தண்ணீர் தேங்கி பலவீனமானது. அந்த கட்டடத்தில் ஒரு தையல் கடை, சலவை கடை, சலுான் கடை உள்பட, 9 கடைகள் உள்ளன.
இந்நிலையில் அதில் தையல் தொழிலாளி நடேசன், 65, கடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் தையல் இயந்திரம், மின்விசிறி, இருக்கைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின. கடையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. அருகே உள்ள குமார், 57, முருகேசன், 55 ஆகியோரின் சலவை, சலுான் கடைகளின் கட்டடத்தில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கடைகளை, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சோமசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள், நேற்று பார்வையிட்டனர்.