நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார், கோட்டைமேட்டுப்பட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம், 55. சமையல் மாஸ்டரான இவர், கூரை வீட்டில் வசிக்கிறார்.
நேற்று காலை, வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தார். அப்போது அருகே கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது, வீடு தீப்பற்றி எரிந்தது. காற்று பலமாக வீச, வீடு முழுதும் தீயில் கருகியது. ஓமலுார் தீயணைப்புத்துறையினர், மேலும் பரவாமல் தீயை கட்டுப்படுத்தினர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, வீரர்கள் தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.