ADDED : ஜூலை 03, 2026 02:43 AM
அ நிறம் | அளவு
சேலம்:கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, கோட்டையூரை சேர்ந்-தவர் வெங்கடேஷ், 39. இவர் கோவை, போத்தனுார் போலீ-சாரால், 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அவரை போலீசார் தேடி வந்தனர். அவர் சேலத்தில் இருப்பதாக தகவல் கிடைக்க, போத்தனுார் போலீசார் வந்தனர். தொடர்ந்து சேலம், புது பஸ் ஸ்டாண்டு அருகே இருந்த அவரை, போலீசார் சுற்றிவ-ளைத்து, கோவைக்கு அழைத்துச்சென்றனர்.
