/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 மாதத்துக்கு பின் ரவுடி சிக்கினார்
/
4 மாதத்துக்கு பின் ரவுடி சிக்கினார்
ADDED : ஜூலை 23, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சிவதாபுரம் அருகே பனங்காட்டை சேர்ந்தவர் குமார், 45. ரவுடியான இவர், அன்ன
தானப்பட்டியில் மிரட்டி பணம் பறித்ததாக, இரு வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், 4 மாதங்களாக ஆஜராகாமல் இருந்தார். இதனால்நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று, வீட்டுக்கு வந்த அவரை, அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.