தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரவுடி கொலை வழக்கு மேலும் 3 பேர் சிக்கினர்

ரவுடி கொலை வழக்கு மேலும் 3 பேர் சிக்கினர்

ரவுடி கொலை வழக்கு மேலும் 3 பேர் சிக்கினர்


ADDED : அக் 29, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்த, ரவுடி டேவிட், 40. கடந்த, 26ல் புதுரோடு மேம்பாலத்தில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து, கூலிப்படையை சேர்ந்த, 7 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போலீசார், மேலும், 3 பேரை, நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டேவிட், அவரது நண்பர் அமிர்த ராஜ் இடையே, ரியல் எஸ்டேட் தொழிலில் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து டேவிட் பழகிய பெண்ணுடன், அமிர்தராஜ் பழகியுள்ளார். இதிலும் தகராறு ஏற்பட, இருவரும் தனித்தனியே தொழில் செய்தனர். இந்நிலையில் அமர்தராஜ் ஒரே நிலத்தை பலரிடம் காட்டி, 1 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் இருந்த ரவுடி தீனதயாளனுக்கு, டேவிட் மீது தொழில் போட்டி இருந்தது தெரிந்தது. இதனால் தீனதயாளன், அமிர்த ராஜ் சேர்ந்து, கூலிப்

படையை ஏவி கொன்றுள்ளனர்.

பிரேத பரிசோதனையில், பின் தலையில், 40 வெட்டு விழுந்திருப்பது தெரியவந்தது. எத்தனை பேர் சேர்ந்து கொன்றனர் என்பது குறித்து விசாரிக்க, கைது செய்யப்பட்டவர்களை, சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தோம். டேவிட்டை எப்படி மடக்கி கொன்றனர் என நிகழ்த்தி காட்டினர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி,

அரிவாளை பறிமுதல் செய்துள்ளோம்.

கண்காணிப்பு

இதுதொடர்பாக ஒரு வாரமாக, டேவிட் செல்லும் இடம், எந்த எந்த பாதையை பயன்படுத்தினார் என்பதை, 3 பேர் கண்காணித்தது தெரியவந்தது. அதன்படி, சேலம், அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்த விக்ரம், 23, குமரகிரி ஏரியை சேர்ந்த தினேஷ், 24, பெரிய

கிணறு சந்தோஷ், 25, ஆகியோரை கைது செய்தோம். வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும், கொலைக்கு மூளையாக செயல்பட்ட தீனதாயளன், அமிர்தராஜை, இந்த வழக்கில் கைது செய்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us