/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.15 லட்சம் மோசடி: சத்தி வாலிபர் கைது
/
ரூ.15 லட்சம் மோசடி: சத்தி வாலிபர் கைது
ADDED : மார் 15, 2024 03:41 AM
சேலம்: சங்ககிரியை சேர்ந்தவர் சீனிவாசன், 36. மேச்சேரியை சேர்ந்தவர் பிறைமதி, 33. இவர்களுக்கு ஆன்லைனில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என, 'டெலிகராம்' மூலம் குறுஞ்செய்தி வந்தது.
அதை நம்பிய அவர்கள், பல்வேறு தவணைகளில் போலி இணையதளத்தில் இருவரும் முறையே, 9.33 லட்சம் ரூபாய், 6.05 லட்சம் ரூபாய் என முதலீடு செய்தனர். பின் சிறு லாபத்தை பெற்ற பின், முதலீடு செய்த தொகையை எடுக்க முடியவில்லை.
அப்போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், மோசடி செய்தவர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன், 36, என தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கேரளா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மோசடி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

