ADDED : ஜூன் 14, 2025 06:40 AM
சேலம்: சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலை சுற்றி, 10 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. நேற்று, சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் அம்சா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கையை, பக்தர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் எண்ணினர். அதில், 18,92,605 ரூபாய், 240 கிராம் வெள்ளி, 124 கிராம் தங்கம் இருந்தன.
பொக்லைன் பறிமுதல்ஓமலுார்: ஓமலுார் அருகே தும்பிப்பாடியில் உள்ள ஓடை புறம்போக்கில், கிராவல்(நுரம்பு மண்) எடுக்கப்பட்டு, அருகே உள்ள தனியார் நிலத்தில் கொட்டப்பட்டது. இதை அறிந்த செம்மாண்டப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலாஜி, மண் அள்ள பயன்படுத்தி பொக்லைன் இயந்திரத்தை, நேற்று பறிமுதல் செய்தார். தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீஸில் ஒப்படைத்து, மண் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புகார் அளித்தார்.