/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜன்னலை உடைத்து கிளினிக்கில் நுழைந்து ரூ.3 லட்சம் திருட்டு
/
ஜன்னலை உடைத்து கிளினிக்கில் நுழைந்து ரூ.3 லட்சம் திருட்டு
ஜன்னலை உடைத்து கிளினிக்கில் நுழைந்து ரூ.3 லட்சம் திருட்டு
ஜன்னலை உடைத்து கிளினிக்கில் நுழைந்து ரூ.3 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 26, 2025 01:59 AM
சேலம், ஜன்னலை உடைத்து, கிளினிக்கில் நுழைந்த மர்ம நபர், மருத்துவர் அறையில் இருந்த, 3 லட்சம் ரூபாயை திருடிச்சென்றார்.
சேலம், ஸ்வர்ணபுரியில் சவுந்தரராஜன் என்பவர், 'டிஜிட்டல் எக்ஸ்ரே, கிளினிக்' நடத்துகிறார். எலும்பு முறிவு சிகிச்சை மையமும் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கிளினிக்கை பூட்டிச்சென்றார். நேற்று காலை சவுந்தரராஜன் வந்து, கதவை திறந்தபோது, பின்புற ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தன.
மேலும் மருத்துவர் அறையில் இருந்த, 3 லட்சம் ரூபாய் திருடுபோனதும் தெரிந்தது. அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், மேசை டிராயரில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.