/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ., நிர்வாகி வீட்டில் ரூ.4 லட்சம், நகைகள் திருட்டு
/
பா.ஜ., நிர்வாகி வீட்டில் ரூ.4 லட்சம், நகைகள் திருட்டு
பா.ஜ., நிர்வாகி வீட்டில் ரூ.4 லட்சம், நகைகள் திருட்டு
பா.ஜ., நிர்வாகி வீட்டில் ரூ.4 லட்சம், நகைகள் திருட்டு
ADDED : நவ 28, 2025 01:06 AM
சேலம், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் நாராயணசாமி, 53. இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் வெங்கடேஷ், 30. பா.ஜ.,வின், மருத்துவர் அணி கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர்கள், நேற்று முன்தினம் ராசிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விசேஷத்துக்கு குடும்பத்துடன் சென்றனர்.
நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 4.12 லட்சம் ரூபாய், 1.5 பவுன் தங்கம், வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து நாராயணசாமி புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய சாதனத்தையும், திருடர்கள் எடுத்துச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிகின்றனர்.