/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இரட்டிப்பு பண மோசடி விவகாரம் கைதான டிரைவர் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
/
இரட்டிப்பு பண மோசடி விவகாரம் கைதான டிரைவர் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
இரட்டிப்பு பண மோசடி விவகாரம் கைதான டிரைவர் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
இரட்டிப்பு பண மோசடி விவகாரம் கைதான டிரைவர் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் முடக்கம்
ADDED : ஜன 30, 2025 05:12 AM
சேலம்: பணம் இரட்டிப்பு தருவதாக மோசடி செய்த விவகாரத்தில், அறக்-கட்டளை பெண் நிர்வாகிக்கு டிரைவராக இருந்தவரின் வங்கி கணக்கில், 84 லட்சம் ரூபாய் இருந்ததால், அந்த கணக்கை, போலீசார் முடக்கியுள்ளனர்.
சேலம், அம்மாபேட்டை, சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளையை, வேலுாரை சேர்ந்த விஜயபானு, 48, என்பவர் நடத்தினார். அங்கு பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்க-ணக்கில் முதலீடு பெறப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து, அங்கீகாரம் இல்லாத திட்டத்தில், முறைகேடாக பெறப்பட்ட, 12.65 கோடி ரூபாய், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்-தனர். அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கரை கைது செய்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர்-படுத்தி, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து  விஜயபானுவின் உதவியாளர், டிரைவரான, வேலுாரை சேர்ந்த சையத் மஹ்மூத்தை கைது செய்து, அவர் ஓட்டிய வேனை பறி-முதல் செய்தனர்.
வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், பேர்லண்ட்ஸில் உள்ள தனியார் வங்கி கணக்கில், டிரைவர் சையத் மஹமூத் கணக்கில், 84 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வங்கி கணக்கை, நேற்று போலீசார் முடக்கியுள்ளனர். கைதான பாஸ்கர்,
பெத்தநாயக்கன்பாளையத்தில் பல கோடி ரூபாய்க்கு நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் கண்டுபிடிக்கப்-பட்டுள்ளது. இவற்றையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தலைமறைவாக உள்ள அறக்கட்டளை நிர்வாகிகளாக செந்தில், அவரது மனைவி ஜான்சி உள்பட மேலும் சிலரை தேடு-கின்றனர். இதனிடையே வாட்ஸாப்பில் ஒரு ஆடியோ உலா வரு-கிறது. அதில் பெண் ஒருவர், 'அம்மா வெளியே வந்தால் எல்லாம் சரியாகிவிடும். எனவே யாரும் பயப்பட்டு புகார் தராமல் பார்த்-துக்கொள்ளவும். புகார் வந்தால் ஜாமினில் வெளியே எடுக்க முடி-யாமல் போய்விடும்' என பேசியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

