ADDED : டிச 06, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், கோட்டை யில், 1,400 ஆண்டு பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. அங்கு செல்லியம்மன், வராகி, கவுமாரி, பிராமி, மகேஷ்வரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட சப்த கன்னியர் சிலைகள் உள்ளன. வளர்பிறை பஞ்சமி திதியையொட்டி நேற்று இரவு, 8:00 முதல், 9:30 மணி வரை, வராகி உள்பட சப்த கன்னியர்களுக்கு, உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
தொடர்ந்து நடந்த அபி ேஷகத்துக்கு பின், வராகி, சப்த கன்னியர்கள் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில் திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் கிடைக்க, கடன் தொல்லை ஒழிய உள்பட பல்வேறு வேண்டுதல்களை வைத்து, தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்டவற்றில் நெய், இலுப்பை எண்ணெய்களில் தீபம் ஏற்றி, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.