/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'இரும்பாலை நிலத்தில் 1,600 ஏக்கரை தமிழக அரசுக்கு வழங்க செயில் சம்மதம்'

ADDED : மார் 07, 2025 07:45 AM
சேலம் : ''இரும்பாலைக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்தில், 1,600 ஏக்கர் நிலத்தை, பாதுகாப்பு தடத்துக்கு வழங்க, 'செயில்' சம்மதம் தெரிவித்துள்ளது,'' என, சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: கடந்த, 2001 முதல், சேலத்தில் உள்ள இரும்பாலையை தனியாருக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 2023ல், தமிழக முதல்வரை, சேலம் மண்டலத்தில் உள்ள தொழில் துறை நிர்வாகிகள் சந்தித்து, இரும்பாலையை விற்க கூடாது என்றும், அதற்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட 3,900 ஏக்கரில், 2,000 ஏக்கரை கையகப்படுத்தி, பாதுகாப்பு வழித்தடம் அமைத்து, ராணுவ தளவாடங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தோம்.
அதன் தொடர் நடவடிக்கையாக, தற்போது மத்திய அரசின், 'செயில்' நிறுவன அறிவிப்பில், ராணுவ தளவாட உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்கு, 1,600 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசுக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் நன்றி.