/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோசடி செய்த பஞ்., தலைவர் "டிஸ்மிஸ்': கலெக்டர் அதிரடி
/
மோசடி செய்த பஞ்., தலைவர் "டிஸ்மிஸ்': கலெக்டர் அதிரடி
மோசடி செய்த பஞ்., தலைவர் "டிஸ்மிஸ்': கலெக்டர் அதிரடி
மோசடி செய்த பஞ்., தலைவர் "டிஸ்மிஸ்': கலெக்டர் அதிரடி
ADDED : செப் 13, 2011 02:06 AM
ஆத்தூர்: தேசிய ஊரக வேலை திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கொத்தாம்பாடி கிராம பஞ்சாயத்து தலைவரை 'டிஸ்மிஸ்' செய்து, மாவட்ட கலெக்டர் மகரபூஷனம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.ஆத்தூர் அடுத்த கொத்தாம்பாடி கிராம பஞ்சாயத்து தலைவராக, தி.மு.க.,வை சேர்ந்த கலாவதி பதவி வகித்து வந்தார்.
அவர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் போலி அடையாள அட்டை தயாரித்து ஊழல் செய்ததாக, அப்பகுதி மக்கள், அரசுக்கு புகார் செய்தனர்.அதையடுத்து, அப்போதைய சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், மாவட்ட திட்ட இயக்குநர் வரதராஜன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள், கொத்தாம்பாடி கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், போலி அடையாள அட்டையை பயன்படுத்தி, 40 லட்சத்து 51 ஆயிரத்து 285 ரூபாய் ஊழல் செய்திருப்பது தெரியவந்தது. மோசடி குறித்து, சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினர்.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால், கொத்தாம்பாடி கிராம பஞ்சாயத்து தலைவி கலாவதியை அதிரடியாக 'டிஸ்மிஸ்' செய்து, மாவட்ட கலெக்டர் மகரபூசணம் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.