/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.96 லட்சம் மதிப்பில் விதை ஆத்துார் வட்டத்தில் விற்க தடை
/
ரூ.96 லட்சம் மதிப்பில் விதை ஆத்துார் வட்டத்தில் விற்க தடை
ரூ.96 லட்சம் மதிப்பில் விதை ஆத்துார் வட்டத்தில் விற்க தடை
ரூ.96 லட்சம் மதிப்பில் விதை ஆத்துார் வட்டத்தில் விற்க தடை
ADDED : ஜூலை 04, 2025 01:23 AM
சேலம், ஆத்துார் வட்டாரத்தில், விதை ஆய்வாளர் குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்த விற்பனை நிலையம் மற்றும் அதிகம் விற்பனையாகும் சில்லரை கடை என, 11 கடைகளில் நடந்த சோதனையில், விதை பதிவு சான்று இல்லாமை, முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 96 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு விதை ரகங்கள், மக்காச்சோள விதைகள் விற்பனைக்கு தடை விதித்து, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா உத்தரவிட்டார்.
மேலும், 'தரமான விதைகளை விற்பதோடு அதற்கான முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று வைத்திருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விற்பனை ரசீது வழங்க வேண்டும். அதில் விதை குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சித்ரா எச்சரித்துள்ளர்.