/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வருவாய் அதிகம் ஈட்டிக்கொடுத்தாலும் திட்டங்கள் குறைவுரயில்வே குறித்து சேலம் எம்.பி., கருத்து
/
வருவாய் அதிகம் ஈட்டிக்கொடுத்தாலும் திட்டங்கள் குறைவுரயில்வே குறித்து சேலம் எம்.பி., கருத்து
வருவாய் அதிகம் ஈட்டிக்கொடுத்தாலும் திட்டங்கள் குறைவுரயில்வே குறித்து சேலம் எம்.பி., கருத்து
வருவாய் அதிகம் ஈட்டிக்கொடுத்தாலும் திட்டங்கள் குறைவுரயில்வே குறித்து சேலம் எம்.பி., கருத்து
ADDED : மே 07, 2025 01:14 AM
சேலம்:சேலம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம், அதன் கோட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தெற்கு ரயில்வே மேலாளர் சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹாவிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி கூறியதாவது:
சேலம் ரயில்வே கோட்டம் தொடங்கி, 20 ஆண்டாகிவிட்டது. வருவாய் அதிகம் ஈட்டிக்கொடுத்தாலும், திட்டங்களை குறைவாக தருகின்றனர். புது ரயில்கள் இயக்கப்படவில்லை. திருச்சி - ஈரோடு; திருநெல்வேலி - ஈரோடு; ராமேஸ்வரம் - கோவை; பாலக்காடு - ஈரோடு இடையே இயக்கப்படும் ரயில்களை, சேலம் வரை நீட்டிக்க கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. கோவையில் இருந்து சேலம் வர, காலையில், 4 மணி நேரம் வரை ரயில்கள் இல்லை. ஈரோடு - ஜோலார்பேட்டை ரயிலையும் காட்பாடி வரை நீட்டிக்க வேண்டும்.
சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குள், பஸ் டெர்மினல் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ரயில்வே காலி இடத்தில் பஸ் உள்ளே சென்று வர வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மரவனேரி, வேம்படிதாளம் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரத்தை மாற்ற வேண்டும். எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை, சேலம் டவுன் ஸ்டேஷனில் நிற்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் ரயில்கள்ஈரோடு எம்.பி., பிரகாஷ் கூறியதாவது: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், 2வது நுழைவாயிலில் பயணியரின் வசதிக்கு, டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட வேண்டும். 4 நடைபாதைகள் உள்ள நிலையில், அதிகரித்து வரும் பயணியருக்கு ஏற்ப, கூடுதலாக இரு நடைமேடைகள் அமைக்க வேண்டும். நடைமேடைகளில் பயணியருக்கு ஓய்விடங்கள் ஏற்படுத்த வேண்டும். ஈரோட்டில் இருந்து தற்போது ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். கொரோனா சூழலுக்கு முன் பசூர், ஊஞ்சலுார், கொடுமுடி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று சென்ற ரயில்கள், தற்போது நிற்பதில்லை. இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகளில் காலி பணியிடம் விபரம் சேகரிக்கும் பள்ளி கல்வி
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கல்வி ஆண்டின் இடையே ஓய்வு வயதை அடைந்தாலும், கல்வியாண்டு இறுதிவரை ஆசிரியர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் வரும், 31ல், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
பள்ளிகள் திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். அதனால் மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. நடப்பாண்டு ஜூன், 1 நிலவரப்படி, பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட காலி பணியிட விபரங்களை அனுப்பும்படி, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் ஆசிரியர், மாணவர் விகிதப்படி, உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்து அதில் பணிபுரிந்த ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது, அதை காலி பணியிடமாக காட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது நிருபர்