நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், குகை, 47வது வார்டு, அம்பேத்கர் தெரு 1, 2ல் உள்ள குடியிருப்புகளில் சாக்கடை கலந்த மழைநீர் புகுந்தது.
இதனால் ஆவேசமடைந்த மக்கள், மாலை, 5:00 மணிக்கு சேலம் -திருச்சி பிரதான சாலை, ஈ.வெ.ரா., வளைவு அருகே சாலை மறியலுக்கு முயன்றனர். போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன் தலை-மையில் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், பேச்சு நடத்தி நட-வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.