ADDED : ஜூன் 25, 2024 02:02 AM
நாளை மின் நுகர்வோர்
குறைதீர் நாள் கூட்டம்
சேலம்: சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள, சேலம் மின் பகிர்மான வட்ட தெற்கு கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (26) காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார். கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகார்வோர்கள், மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்திற்கு இடைஞ்சல்
'குடிமகன்' மீது வழக்குஇடைப்பாடி: இடைப்பாடி, தாவாந்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 45, கூலிதொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, 3:30 மணிக்கு தாவாந்தெரு, காளியம்மன் கோவில் எதிரே உள்ள வேகத்தடை அருகில் மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக சாலையில், சாக்கை விரித்து போட்டு, அதன் மீது படுத்து கொண்டுள்ளார். அந்த வழியாக சென்ற வாகனங்கள், 'குடிமகனை' விட்டு ஒதுங்கி சென்றது.
இந்நிலையில், இடைப்பாடி போலீசார் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.