ADDED : ஆக 15, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: பஞ்சாப்பை சேர்ந்தவர் கவுதம் கோயல். சென்னை, பள்ளிக்கரணையில் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய இவர், சேலம் எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். ஏற்கனவே, மதுரை, சேலம், தாம்பரம் ஆகிய மாநகரங்களில் துணை கமிஷனராக பணிபுரிந்த இவர், நேற்று, சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், 147வது எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமையிட துணை கமிஷனர்
துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சித்தலக்கரையை சேர்ந்தவர் கீதா. ஆவடி மாநகரில் கூடுதல் துணை கமிஷனராக பணிபுரிந்த அவர் பதவி உயர்வு மூலம், சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.