/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருப்பதியில் பலியான சேலம் பெண்; மேச்சேரி பம்ப் ஆப்ரேட்டரின் மனைவி
/
திருப்பதியில் பலியான சேலம் பெண்; மேச்சேரி பம்ப் ஆப்ரேட்டரின் மனைவி
திருப்பதியில் பலியான சேலம் பெண்; மேச்சேரி பம்ப் ஆப்ரேட்டரின் மனைவி
திருப்பதியில் பலியான சேலம் பெண்; மேச்சேரி பம்ப் ஆப்ரேட்டரின் மனைவி
ADDED : ஜன 10, 2025 07:14 AM
மேட்டூர்: திருப்பதி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான, சேலத்தை சேர்ந்தவர், மேச்சேரி டவுன் பஞ்சாயத்து பம்ப் ஆப்ரேட்டரின் மனைவி என தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி, தாசனுார் அடுத்த மேட்டுப்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் கிருஷ்ணன், 52. மேச்சேரி டவுன் பஞ்சாயத்து பொங்கபாலி தரைமட்ட நீர் தேக்கதொட்டி தற்காலிக பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி மல்லிகா, 50. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் தம்பதியர், அவரது உறவினர் உள்பட, 10 பேர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பங்கேற்க, 'டோக்கன்' வாங்க காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், 'கவுன்டர்' கதவு திறந்ததால், பக்தர்கள் முண்டியடித்து, 'டோக்கன்' வாங்க முயன்றனர். அப்போது கிருஷ்ணன், மல்லிகா நெரிசலில் சிக்கினர். இதில் மல்லிகா உள்பட, 6 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தது. மல்லிகா உடல், திருப்பதி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, வேனில் நேற்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தண்ணீர் பந்தலில் தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. மல்லிகாவின் தந்தை ராமசாமி, ஏற்கனவே இறந்த நிலையில், தாய் முனியம்மாள், இரு சகோதரர்கள் உள்ளனர். மல்லிகா பலியானது, மேச்சேரி மற்றும் தண்ணீர் பந்தல் பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.கிருஷ்ணன் கூறுகையில், ''எனக்கும், மல்லிகாவுக்கும் திருமணமாகி, 30 ஆண்டாகிறது. தமிழக அரசு, இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளது. அத்துடன் என் வேலையை நிரந்தரம் செய்தால் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.

