ADDED : ஜன 02, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் மொஹல்லா மற்றும் ஜாமியா மஜித் சார்பில், சந்தனக்-கூடு உரூஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சந்தனக்குடம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, ஹஜ்ரத் சைய-தினா சுல்தான் கபீர் முகைதீன் அவுலியா, சந்தனம் சாற்றும் விழா நடந்தது.
ஊர்வலத்தின்போது மக்கள் பலருக்கு சந்தனம், இனிப்பு வழங்கப்பட்டது. முன்னதாக தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து இஷா தொழுகைக்கு பின் பாத்திஹா நடந்தது. திரளான முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

