/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்
/
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 25, 2024 02:00 AM
ஆத்துார்: மாத சம்பளம் நிலுவை தொகை, வருங்கால வைப்புத் தொகை செலுத்தாமல் உள்ளதை கண்டித்து, ஒப்பந்த பணியாளர்கள், ஆத்துார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. ஐந்து மண்டலங்களாக பிரித்து, சுகாதார துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 89 துாய்மை பணியாளர்கள், 123 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எஸ்.ஆர்., எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஒப்பந்த பணியாளர்கள், 123 பேருக்கு ஒரு மாத சம்பளம் வழங்காமலும், ஏழு மாதமாக வருங்கால வைப்பு நிதி செலுத்தாமலும்இருந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, துாய்மை பணிக்கு வந்த ஒப்பந்த பணியாளர்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நிலுவை சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் தேவையான உபகரணங்கள் கேட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
காலை, 11:00 மணியளவில் ஆத்துார் நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, ஒப்பந்த பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது துாய்மை பணியாளர்கள், 'நிலுவை சம்பளம் வழங்காமலும், வருங்கால வைப்பு தொகை செலுத்தப்படாமலும் உள்ளது. தவிர, துாய்மை பணியாளர்களுக்கு தேவையான தளவாட பொருட்கள் வழங்க வேண்டும். வரும் 27க்குள் தீர்வு காணவில்லை எனில், வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.
அதற்கு நகராட்சி தலைவர், 'நிலுவை சம்பளம் பணியாளர்களின் வங்கி கணக்கில் போடப்பட்டு வருகிறது. வருங்கால வைப்பு தொகை, தளவாட பொருட்கள் விரைவில் வழங்கப்படும். சாலைகளில் உள்ள குப்பை, கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும்' என்றார்.
இதையேற்று கொண்ட ஒப்பந்த பணியாளர்கள் மதியம், 12:30 மணிக்கு மேல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.