/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சங்கடஹர சதுர்த்தி விநாயகர் ஊர்வலம்
/
சங்கடஹர சதுர்த்தி விநாயகர் ஊர்வலம்
ADDED : அக் 11, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பிள்ளை, சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, இளம்பிள்ளை, காடையாம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, சுவாமிக்கு சந்தனம்,
திருமஞ்சனம், மஞ்சள், பன்னீர், திருநீறு, தேன், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின் அருகம்புல் மாலை, பூக்கள் மாலை சூட்டப்பட்டு பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவரை அலங்காரம் செய்து, முக்கிய வீதிகள் வழியே பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.