/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கடுங்குளிரால் பள்ளி மாணவர்கள் அவதி
/
ஏற்காட்டில் கடுங்குளிரால் பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : நவ 16, 2024 01:33 AM
ஏற்காடு, நவ. 16-
ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த, 3 நாட்களாக வழக்கத்தை விட அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் ஏற்காடு முழுதும் கடுங்குளிர் நிலவுகிறது.
நேற்று காலை, 8:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை பனிமூட்டத்துடன் மழை பெய்தது. பின் சிறிது நேரம் மழை இல்லாமல் இருந்த நிலையில் மாலை, 4:30க்கு மீண்டும் பெய்ய தொடங்கிய மழை, மாலை வரை பெய்தது.
ஏற்காட்டை சூழ்ந்த பனிமூட்டம், அடிக்கடி பெய்து வரும் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக மலைக்கிராமங்களில் இருந்து ஏற்காடு டவுனுக்கு படிக்க வரும் பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். அவர்கள், 'ஸ்வெட்டர், ஜெர்கின்' அணிந்தபடி பள்ளிக்கு சென்றனர்.
அதேபோல் ஆத்துார், அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம், மஞ்சினி, அம்மம்பாளையம், பைத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவியது. வாழப்பாடியிலும் நேற்று மதியம் லேசான மழை
பெய்தது.