தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி


ADDED : நவ 06, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:வரும், 8ல் தீபாவளியை முன்னிட்டு, ஓமலுார் தீயணைப்பு துறை சார்பில், சக்கரைசெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, மாணவ, மாணவியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும், தப்பிக்க வேண்டும் என்பது குறித்தும், தீயணைப்பு வீரர்கள் விளக்கினர். நீர்நிலைகள், பேரிடர் காலத்தில் காத்துக்கொள்ளவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.அதேபோல் ஆத்துார் தீயணைப்பு துறை, ரோட்டரி மிட்டவுன் கிளப் சார்பில், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு குறித்து செயல் விளக்க முகாம் நடந்தது. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. அப்போது விபத்தில்லா தீபாவளி குறித்து, மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us