/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் அறிவியல், தொழில்நுட்ப மையம் திறப்பு

ADDED : ஆக 28, 2025 01:22 AM
சேலம், சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரி, இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை திட்டத்தில், ஓமலுார், செக்காரப்பட்டியில் அமைத்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடந்தது. சோனா கல்வி நிறுவன தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். சோனா தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய முதன்மை ஆய்வாளர் சத்தியபாமா, திட்டம் குறித்து பேசினார். பின் சந்தியூர், வேளாண் கழக திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி பேசினர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து அத்திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார். திட்ட இணை ஆய்வாளர் ராஜேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.