/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு
/
கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு
கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு
கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு
ADDED : ஆக 25, 2025 03:15 AM
மேட்டூர்: இளம்பிள்ளையை சேர்ந்த தறித்தொழிலாளி ராஜா, 37. அதே பகுதியை சேர்ந்த நண்பர் மணியுடன், நேற்று மேட்டூருக்கு சுற்-றுலா வந்தார். மதியம், 3:00 மணிக்கு இருவரும் அணை அடி-வாரம், குள்ளவீரன்பட்டி பாலம் அருகே குளித்துக்கொண்டிருந்-தனர்.
கால்வாயில் சில நாட்களாக வினாடிக்கு, 850 கனஅடி நீர் வெளி-யேற்றிய நிலையில், இழுவை அதிகம் இருந்தது. இதை உண-ராமல், நீச்சல் தெரிந்த ராஜா, கால்வாயில் குளித்தபோது தண்ணீர் இழுத்துச்சென்றது.
இதை அறிந்து, மேட்டூர், நங்கவள்ளி தீயணைப்பு நிலைய அலு-வலர்கள் வெங்கடேசன், சரவணன் தலைமையில், 17 பேர், மதியம், 3:30 மணி முதல், ராஜாவை தேடினர். மாலை, 6:30 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இன்று மீண்டும் தொழிலாளியை தேட, தீயணைப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.