ADDED : அக் 12, 2024 01:02 AM
புகையிலை
பொருட்கள்
பறிமுதல்
மேட்டூர், அக். 12-
மேச்சேரி, மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன், 39. அப்பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார்.
அவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அவரது மார்க்கெட்டில், மேச்சேரி போலீசார் சோதனை நடத்தினர். அங்கு, 11 மூட்டை ஹான்ஸ், 2 மூட்டை விமல், தலா ஒரு மூட்டை கூல் லிப் என மொத்தம், 208 கிலோ எடையுள்ள, 15 மூட்டை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 1.02 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்த மேச்சேரி போலீசார் அருள்முருகன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டியில் நேற்று தம்மம்பட்டி போலீசார், ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது, செந்தாரப்பட்டியை சேர்ந்த ஜெபிதா, 61, என்பவர், தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார்.
தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, புகையிலை பொருள் விற்ற ஜெபிதாவை கைது செய்தனர்.