sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அலையவிடும் டி.எஸ்.ஓ., ஆஃபீஸ்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

/

அலையவிடும் டி.எஸ்.ஓ., ஆஃபீஸ்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அலையவிடும் டி.எஸ்.ஓ., ஆஃபீஸ்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

அலையவிடும் டி.எஸ்.ஓ., ஆஃபீஸ்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


ADDED : ஆக 12, 2011 01:29 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: ஆத்தூர் டி.எஸ்.ஓ., அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் பெறுதல், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றுக்கு அலைக்கழிப்பு செய்து வருவதை கண்டித்து, பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஆத்தூர் தாலுகா அலுவலக வளகத்தில், டி.எஸ்.ஓ., (வட்ட வழங்கல் அலுவலகம்) உள்ளது. அதில், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகள், ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் யூனியன்களில், 91 கிராம பஞ்சாயத்துகளில், 220 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு வழங்குதல், விண்ணப்பம் பெறுதல், கார்டுகளில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், வேறு கடைக்கு மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.



கடந்த சில மாதங்களுக்கு முன் வட்ட வழங்கல் அலுவலராக பொறுப்பேற்ற சிவக்கொழுந்து, மண்டல துணை தாசில்தார் பணிக்கு மாற்றப்பட்டார். அதையடுத்து பொறுப்பு அலுவலர்கள், வேண்டா வெறுப்பாக பணிகள் செய்து வந்ததால், பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். தற்போது, டி.எஸ்.ஓ.,வாக அறிவுடை நம்பி என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள், ரேஷன் கார்டுகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்வதால், பலர் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். அதன்படி, புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் பெறுதல், கார்டுகளில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு செல்லும் பொதுமக்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், போதிய பணியாளர்கள் இல்லையென காரணம் காட்டி, மாதக்கணக்கில் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.



இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில், ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டி.எஸ்.ஓ., அலுவலகத்தில் குவிந்தனர். தொடர்ந்து, பொதுமக்களை அலைக்கழிப்பு செய்து வரும் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, டி.எஸ்.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் பணியில் ஈடுபட்டனர். அதனால் ஆத்தரமடைந்த பொதுமக்கள், வட்ட வழங்கல் அலுவலர்களை சூழ்ந்து கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us