sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறப்பு தனிப்படை போலீஸார் அதிரடி கள்ளச்சாராய வியாபாரிகள் 7 பேர் கைது

/

சிறப்பு தனிப்படை போலீஸார் அதிரடி கள்ளச்சாராய வியாபாரிகள் 7 பேர் கைது

சிறப்பு தனிப்படை போலீஸார் அதிரடி கள்ளச்சாராய வியாபாரிகள் 7 பேர் கைது

சிறப்பு தனிப்படை போலீஸார் அதிரடி கள்ளச்சாராய வியாபாரிகள் 7 பேர் கைது


ADDED : ஆக 12, 2011 01:30 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில், இரு டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான, 90 சிறப்பு தனிப்படை போலீஸார், கலால் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், நான்கு பெண்கள் உள்பட ஏழு சாராயா வியாபாரிகளை கைது செய்தனர்.

சேலம், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி., காந்திராஜன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், நேற்று அதிகாலை 3 மணியளவில், சேலம் மாவட்ட எஸ்.பி., மயில்வாகனன் மேற்பார்வையிலான இரு டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான, 90 சிறப்பு தனிப்படை போலீஸார், ஆத்தூர் அம்பேத்கர் நகர், மந்தைவெளி, காக்காபாளையம் உள்ளிட்ட பகுதியில் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது, மந்தைவெளி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த தி.மு.க.,வை சேர்ந்த, 29வது வார்டு செயலாளர் சந்துமணி ராஜா (50), மார்க்கண்டன் (50), சந்திரிகா (40), வளத்தி ராணி (35), காக்காபாளையம் மலர் (40), ராஜாத்தி (45), வேப்பிலைகுட்டை மணி (30) ஆகிய ஏழு பேரை, போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், தலைமைறவான, 10 சாராய வியாபாரிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.



இதுகுறித்து ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகர் கூறியதாவது: சேலம் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை கட்டுப்படுத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆத்தூர் நகர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஏழு பேரை கைது செய்துள்ளோம். இவர்கள், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்தவர்கள். முதல் முறையாக மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு போலீஸார், வருவாய் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கொண்ட தனிப்படை, சாராயம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us