/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.55 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
/
ரூ.55 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
வாழப்பாடி: மின்னாம்பள்ளியில் நேற்று நடந்த சந்தையில், ரூ.55 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
சேலம் மாவட் டம், வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி பகு-தியில், நேற்று மாடுகள் விற்பனை நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு தொடங்கிய வாரச்சந்தைக்கு, 1,700 மாடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்-களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். கன்றுகள், ஜெர்சி, பசுமாடு, காங்கேயம், வடகத்தி மாடு, தெற்கத்தி மாடு உள்ளிட்ட பலரக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கன்றுகள், 4,000 முதல், 8,000 ரூபாய் வரையும், மாடுகள், 10 ஆயிரம் முதல் 60, ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது. நேற்று கூடிய வாரச்சந்தையில், 55 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.