/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விமான நிலைய அலுவலர்கள் செல்ல தனி வழி அமைப்பு
/
விமான நிலைய அலுவலர்கள் செல்ல தனி வழி அமைப்பு
ADDED : டிச 26, 2024 02:38 AM
ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில், அதன் அலுவலர்கள், பணியா-ளர்கள், தீயணைப்பு வீரர்கள், விமான கட்டுப்பாட்டு அலுவ-லர்கள், இண்டிகோ, அலையன்ஸ் ஏர் நிறுவன ஊழியர்கள், விமானி பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் என, 200க்கு மேற்-பட்டோர் உள்ளனர். அவர்கள் பணிக்கு வரும்போது, பயணியர் செல்லும் வழியில், பாதுகாப்பு போலீசாரிடம் அடையாள அட்-டையை காட்டிய பின் உள்ளே சென்று வருகின்றனர்.
ஆனால், முக்கிய வி.ஐ.பி.,க்கள், பயணியர் வரும்போது, அலுவ-லர்கள் உள்ளிட்டோர், உள்ளே செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவர்கள் தனி வழியில் செல்லும்படி, புது கட்டடம், கேன்டீன் அருகே கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டடத்தில் பொருட்களை சோதனை செய்யும் கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது. அங்கு அனைத்து பணிகள் முடிந்து, புது கட்டடம் திறப்பு விழா, அடுத்த வாரம் நடக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

