/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.பல லட்சம் மோசடி
/
தீபாவளி சீட்டு நடத்தி ரூ.பல லட்சம் மோசடி
ADDED : நவ 13, 2025 01:46 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்தவர் பாலு, 51. அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். இவர் உள்பட, 20 பேர், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
அம்மாபேட்டை, வித்யா நகரில், 'சபரிவாசன் தீபாவளி சிறு சேமிப்பு சீட்டு' பெயரில் இரு பெண்கள் சீட்டு நடத்தினர். அதில் சேர்ந்த, 60க்கும் மேற்பட்டோரிடம், 100, 200, 1,200 ரூபாய் என, வாரந்தோறும் பணம் வசூலிக்க, ரமேஷ் என்பவர் வந்து சென்றார். கடந்த அக்., 1ல், சேமிப்பு தொகை குறித்து, 3 பேரிடம் கேட்டபோது, ஒரு வாரத்தில் தருவதாக கூறினர். ஆனால் தரவில்லை.
முதலீடு செய்த அனைவரும் ஒன்றுசேர்ந்து சென்று கேட்டதற்கு, பணம் தரமுடியாது என கூறினர். தொடர்ந்து கேட்டதால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பல லட்சம் ரூபாயை ஏமாற்றி, மிரட்டல் விடுப்போர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'அன்றாட கூலி வேலை செய்து வரும் நாங்கள், தீபாவளிக்கு சேமிப்பு செய்த, 4 லட்சம் ரூபாயை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என்றனர்.

