ADDED : அக் 22, 2026 01:29 AM
சேலம்: சேலம் சண்முகா மருத்துவமனை சார்பில், அதன் மருத்துவ சேவைகளை எளிதாக அணுகும் நோக்கில் உருவாக்கப்பட்ட, Shanmuga 360(சண்முகா 360) செயலி மற்றும் ஜன் அவ்ஷதி ஹெல்த் கார்டு அறிமுக நிகழ்ச்சி, சண்முகா மருத்துவ மனை அரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மருத்துவர் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளை அறங்காவலர், செயலர் கனகசபாபதி; சிறப்பு அழைப்பாளராக, இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் அமைப்பின் மூத்த சந்தைப்படுத்தல் அதி-காரி அரவிந்த் சுவாமி பங்கேற்றனர். ஹெல்த் கார்டை, பா.ஜ.,வின், சேலம் மாநகர மாவட்ட தலைவர் சசிகுமார் அறிமுகப்படுத்தினார். சண்முகா மருத்துவமனை நிர்-வாக இயக்குனர் பன்னீர்செல்வம், தலைமை செயல் அதிகாரி பிர-புசங்கர் பங்கேற்றனர். ஜன் அவ்ஷதி கேந்திரா, சேலம் சார்பில், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக மணிகண்டன் செயல்பட்டார்.
முன்னதாக, இச்
செயலி மூலம் மருந்து வினியோகம், வீட்டு மருத்துவப்பராம-ரிப்பு, ஆம்புலன்ஸ் சேவை, பிசியோதெரபி சேவை, ஆய்வக பரி-சோதனை, மருத்துவரின் இரண்டாவது மருத்துவ கருத்து உள்-ளிட்ட சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்-டது. மேலும் ஹெல்த் கார்டு மூலம், ஜன் அவ்ஷதி சேவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் முக்கி-யத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
