/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாநகரில் வரும் 19, 20ல் ஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம்
/
சேலம் மாநகரில் வரும் 19, 20ல் ஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம்
சேலம் மாநகரில் வரும் 19, 20ல் ஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம்
சேலம் மாநகரில் வரும் 19, 20ல் ஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம்
ADDED : ஏப் 18, 2025 01:34 AM
சேலத்தில் வரும், 19, 20 ஆகிய நாட்களில் ஷீரடி சாய்பாபா பாதுகை
தரிசனம் நடக்கிறது. இது குறித்து, ஷீரடி சாய் நண்பர்கள் குழு நிர்வாகி கூறியதாவது:
ஷீரடி சாய் நண்பர்கள் குழு துவங்கப்பட்டு, 15 ஆண்டுகள் ஆகிறது. தொடங்கப்பட்ட நாள் முதல், பாபா பக்தர்களை ஷீரடி புனித யாத்திரை அழைத்து சென்று வருகிறோம், எங்கள் குழுவின் சிறப்பம்சங்கள், ஒவ்வொரு ஆகஸ்ட் 15ல், ஏழை எளிய கிராம மக்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் உணவு வழங்கி வருகிறோம், தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியவர்களுக்கும், ஊனமுற்றோர் மற்றும் தெய்வ பிறவி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வருகிறோம். பாபா சன்னிதானத்தில் பாபாவின் விளக்கு பூஜை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ல் மாலையில் நடத்தி வருகிறோம்.
இதில் அமரும், 350 பெண்களுக்கும் தலா, 2,500 ரூபாய் மதிப்புள்ள பூஜை பொருட்கள், தலா ஒரு நபருக்கு ஒரு புடவை இலவசமாக கொடுத்து பூஜை செய்து வருகிறோம். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், இதுவரை கல்யாணம் ஆகாத கன்னி பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பங்கு கொள்வதால் அவர்களுக்கு ஒரே வருடத்தில் வேண்டிய பலன் கிடைக்கும்.
ஷீரடி சுற்றி பல்லக்கு ஊர்வலம், பாடல்களுடன் கூடிய மேளதாளங்களும், பாபாவை சந்தோஷப்படுத்த அதில் அனைவருக்கும் ஆனந்தத்தில் மகிழ்ச்சியடைவர். எங்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் ஷீரடிக்கு பக்தர்களை அழைத்து செல்கிறோம், இதுவரை, 15 ஆண்டுகளில் 68,000 பக்தர்களை ஷீரடி மண்ணை தொட வைத்துள்ளோம். குறைந்த செலவில் பக்தர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருகிறோம். பக்தர்கள் அனைவருக்கும் சாப்பாடு, தங்கும் இடம், உட்பட எல்லாம் எங்கள் குழு நிர்வாகிகள், நண்பர்கள் செய்து கொடுத்து, அவர்களின் பயணங்களில் எந்தவித சிரமமும் இல்லாமல், பாபாவை தரிசனம் செய்ய வழிவகை செய்கிறோம்.
மேலும் ஆண்டுதோறும், பாபா பாதுகை தரிசனம் என சேலத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், பாபா பயன்படுத்திய பாதுகையை பக்தர்கள் தரிசனத்திற்கு ஷீரடியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும், பாபாவின் பிரசாதம் தொடர் அன்னதானமாக வழங்கி வருகிறோம்.
பாபாவின் நோக்கம் யாருமே பசியுடன் இருக்கக் கூடாது என்பதே. அதை எங்கள் குழு சிறப்பாக செய்து வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறுவது போல, இந்தாண்டும் பாபாவின் பாதுகை சேலத்திற்கு வருகிறது. அதன் அடிப்படையில் ஏப்ரல், 19ல் இருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் இந்தாண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, காரணம் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் சார்பில், ஷீரடி சாய்பாபா சன்னிதானத்தில் இருந்து கோவில் குருக்கள் உட்பட, 30க்கும் மேற்பட்ட குழுவுடன் சாய்பாபா நம்மை தேடி சேலத்திற்கு முதன் முறையாக வருகிறார் என்பதே சிறப்பு.
ஷீரடி சாய் நண்பர்கள் குழு சார்பில், ஆண்டுதோறும் ஷீரடி சாய்பாபா பயன்படுத்திய பாதுகை சேலத்திற்கு பக்தர்களின் தரிசனத்திற்கு ஷீரடியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இந்தாண்டு முதன் முறையாக ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட், ஷீரடி மற்றும் சேலம் ஷீரடி சாய் நண்பர்கள் குழு இணைந்து ஷீரடி சாய்பாபா பாதுகை தரிசனம் நிகழ்ச்சி வரும், 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரலஷ்மி மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும், 19ல் ஷீரடி சாய்பாபாவின் பாதுகை பல்லக்கு ஊர்வலம் மாலை 4:00 மணிக்கு சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, 3 ரோடு வரலஷ்மி மஹாலில் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, 20ல் ஞாயிற்றுகிழமை காலை 8:00 மணிக்கு காகட ஆரத்தி நடைபெறுகிறது. தொடர்ந்து 8:30 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், மற்றும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், பாராயணம், ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி பாராயணம், ஸ்ரீ ருத்ரம்-வேத பாராயணம் நடைபெறுகிறது. 9:00 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சி, 10:00 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு வீணை கச்சேரி, மூகாம்பிகா வீணாம்ருதம் நிகழ்ச்சி என இரவு, 9:00 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினம் பாபாவின் பாதுகையை, பக்தர்கள் தொட்டு தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் காலை முதல் இரவு வரை, தொடர் அன்ன பிரசாதம் எனும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் அனைவரும் இரண்டு தினங்களிலும் வருகை புரிந்து பாபாவின் ஆசி பெற வேண்டுமெனவும், பாதுகை தரிசனம் கோடி புண்ணியம் என்பது போல் பாபாவின் பாதுகை தரிசனம் செய்து அருள் பெறுமாறு சேலம் ஷீரடி சாய் நண்பர்கள் குழு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். பக்தர்கள் அனைவருக்கும் இலவச தரிசனம். மேலும் விவரங்களுக்கு 94445-55041, 9842822586 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.

