/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பழமையான சிலைகள் கண்டெடுப்பு பூஜை செய்த சிவாச்சாரியார்கள்
/
பழமையான சிலைகள் கண்டெடுப்பு பூஜை செய்த சிவாச்சாரியார்கள்
பழமையான சிலைகள் கண்டெடுப்பு பூஜை செய்த சிவாச்சாரியார்கள்
பழமையான சிலைகள் கண்டெடுப்பு பூஜை செய்த சிவாச்சாரியார்கள்
ADDED : டிச 18, 2024 01:58 AM
சேலம், டிச. 18-
சேலம் அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அலுவலர்கள், போலீசார், திருத்தொண்டர் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், அன்னதானப்பட்டியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, திரிபுரநாதர், 3ம் குலோத்துங்க சோழனால் வைக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சிவன், அம்சாய் அம்மன், பைரவர், சண்டீகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு சிவாச்சாரியார்கள் அபிேஷகம் செய்தனர். பின் பட்டாடை உடுத்தி சிறப்பு பூஜை, அர்ச்சனைகள் நடத்தி, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''800 ஆண்டு கால பழமையான கல்வெட்டு, வருவாய் துறை ஆவணப்படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நிலம், கோவில் சொத்து என்று உள்ள இந்த இடத்தை, நில நிர்வாக ஆணையம், அறநிலைத்துறை சேர்ந்து தணிக்கை செய்ய வேண்டும். சிவன், அம்பாள் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சிலைகள் பலவற்றை காணவில்லை. அச்சிலைகளை திருடியவர்கள் குறித்து விசாரித்து, தண்டனை வழங்க நீதிமன்றத்தை அணுகுவோம்,'' என்றார்.