ADDED : ஜூலை 29, 2026 05:09 AM
ஜலகண்டாபுரம்; ஜலகண்டாபுரம் டவுன் பஞ்சாயத்து, 12வது வார்டு, இடைப்பாடி சாலை செல்லும் வழியில் கரட்டு முனியப்பன் கோவில் உள்ளது. அங்கு, 'அம்ருத் - 2.0' குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், 2022 - -23ல், 14 கோடி ரூபாய் மதிப்பில், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டன. தி.மு.க., ஆட்சியிலேயே பணி முடிந்த நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம், 2:00 மணிக்கு, அத்-தொட்டிகள் அமைந்துள்ள பகுதியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முழுதும் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்து, டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் வந்து பார்த்து விசாரித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தொட்டி-களை சுத்தப்படுத்த, அதில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். அந்த நீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி, ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
அப்போது மக்கள் யாரும் இல்லாததால் அசம்பா-விதம் ஏற்படவில்லை' என்றனர்.
ஆனால் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு பணியின் தரம் குறித்து அதிகாரிகள் முறை-யாக ஆய்வு செய்ய வேண்டும் என, மக்கள்
வலியுறுத்தினர்
