/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
ADDED : நவ 26, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை பொருட்கள்
விற்ற கடைக்கு 'சீல்'
இடைப்பாடி, நவ. 26-
இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, கூடக்கல் பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, இடைப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்புபழனி, பூலாம்பட்டி, கூடக்கல் பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கூடக்கல் பகுதியில் பழனிசாமி என்பவரது கடையில் ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் இருந்துள்ளது.
பின், அந்த கடைக்கு இடைப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்புபழனி, 'சீல்' வைத்தார். கடை, 15 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் எனவும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.