/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரும் 29ல் கடைகள் அடைப்பு; அரிசி ஆலைகளும் இயங்காது
/
வரும் 29ல் கடைகள் அடைப்பு; அரிசி ஆலைகளும் இயங்காது
வரும் 29ல் கடைகள் அடைப்பு; அரிசி ஆலைகளும் இயங்காது
வரும் 29ல் கடைகள் அடைப்பு; அரிசி ஆலைகளும் இயங்காது
ADDED : நவ 27, 2024 06:44 AM
சேலம்: சேலம் நகர அனைத்து வணிகர் சங்க பொதுச்செயலர் ஜெயசீலன் அறிக்கை: மத்திய அரசின், ஜி.எஸ்.டி., கவுன்சில், நாடு முழுதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீதான, 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். சேலம் மாநகராட்சி பல மடங்கு உயர்த்தி விதித்துள்ள சொத்து வரி, குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும், 29ல் தமிழகம் முழுதும் கடைகளை அடைத்து வேலை நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதேபோல், லீபஜார் வர்த்தக சங்கமும், கண்டனத்தை தெரிவித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில், அன்று ஒரு நாள் கடைகளை அடைத்து முழு வேலை நிறுத்தப்போரட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அதேபோல், ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தை முழுமையாக நீக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும்படி, வரும், 29ல் தமிழகம் முழுதும் ஒரு நாள் மட்டும் முழு நேர வேலை நிறுத்தம் செய்ய, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும், 29 அன்று அரிசி ஆலைகளை இயக்காமல், தொழில் முனைவோர்களும், மாவட்ட, தாலுகா சங்கங்களும், அவரவர் உறுப்பினர்களை, வேலை நிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலர் பரணிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.