/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
/
கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
ADDED : பிப் 13, 2025 01:17 AM
கரம்பிடித்த 'மவுன' காதல்பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
ஓமலுார்:தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் அபிபிரசாத், 25. பி.சி.ஏ., படித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமுதா, 24. டிப்ளமோ படித்துள்ளார்.
பேச முடியாத மாற்றுதிறனாளிகளான இருவரும், தர்மபுரியில் ஒன்றாக பள்ளியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த, 9ல் குமுதா வீட்டிலிருந்து வெளியேறி, அபிபிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். நேற்று, சேலம் எஸ்.பி., அலுவலத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்து ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் இருவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பெங்களூரில் காதல்
தலைவாசல், சதாசிவபுரத்தை சேர்ந்தவர் பிரதீப், 30. பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, எம்.எஸ்சி., படிக்கிறார். பெங்களூருவை சேர்ந்தவர் சிந்து, 21. பி.பி.ஏ., 3ம் ஆண்டு படிக்கிறார். இருவரும் காதலித்த நிலையில், இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த, 9ல், வீட்டை விட்டு வெளியேறி, நேற்று, சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனுார் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சு நடத்தினர். மாணவியின் பெற்றோர் ஏற்காததால், பிரதீபுடன், மாணவியை அனுப்பினர்.