/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியரிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியர் கைது
/
மாணவியரிடம் சில்மிஷம் அரசு பள்ளி ஆசிரியர் கைது
ADDED : ஆக 01, 2025 01:33 AM
இடைப்பாடி, சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை, 1,900க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அதில், 8 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் ஆசிரியராக செந்தில் குமரவேல், 58, உள்ளார். அவர் மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. 6 மாதங்களுக்கு முன், அவரால் பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் சீதாவிடம் வாக்குவாதம் செய்து விட்டு சென்றனர்.
கடந்த வாரம், 8ம் வகுப்பு மாணவியிடம், செந்தில்குமரவேல் சில்மிஷம் செய்துள்ளார். அந்த மாணவி, ஆசிரியர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய எண்: 1098க்கு தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார்.
நேற்று அப்பள்ளியில், சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முரளி, சங்ககிரி டி.எஸ்.பி., சிந்து விசாரித்தனர். 20க்கும் மேற்பட்ட மாணவியர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரித்தனர். மாணவியர் பலரும், செந்தில்குமரவேல் மீது புகார் தெரிவித்தும் தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுக்காதது தெரிந்தது. இதனால் சங்ககிரி மகளிர் போலீசார், செந்தில்குமரவேலுவை கைது செய்தனர். தலைமை ஆசிரியை சீதா, 4 ஆசிரியர்களிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.